கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கிட்ச்னரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
ஆண், பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆண் மற்றும் பெண்ணின் நிலைமை ஆபத்தானது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை.
வீடு ஒன்றினுள் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவத்தினால் வீடு மற்றும் அதனை அண்டிய கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.