கனடாவில் 1.2 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையிட்ட நான்கு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் 15 வயது சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
றொரன்டோவின் ப்ளோர் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஆயுத முனையில் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தது.
நகரின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.