றொரன்டோவில் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 70 முதல் 80 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நடை பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை இனந்தெரியாத நபர் ஒருவர் கீழே தள்ளி விட்டுள்ளார்.
இவ்வாறு கீழே விழுந்த பெண்ணின் முகம் மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் காயங்கள் காரணமாக பெண் உயிரிழந்துள்ளதாகவும் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எழுமாறான அடிப்படையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் கனடாவின் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.