Home இந்தியா பெரும்பாலான மீன்களின் விலை விலை உயர்வு

பெரும்பாலான மீன்களின் விலை விலை உயர்வு

by Jey

வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் மார்க்கெட்டில் வழக்கத்தை விட மீன் விற்பனை அதிகமாக இருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த மீன்வகைகளை வாங்கி சென்றனர்.

பெரும்பாலான மீன்களின் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையும், நடுத்தர வஞ்சிரம் ரூ.600-க்கும், இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரையும், நண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும், கட்லா ரூ.160 முதல் ரூ.180 வரையும், பாறை ரூ.500-க்கும், மத்தி ரூ.120-க்கும் விற்பனையானது.

பெரும்பாலான மீன்களின் விலை கடந்த வாரத்தை விட கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகமாக விற்பனையானது. பொங்கல் பண்டிகையையொட்டி மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் மீன்களின் வரத்து குறைந்து, விலை சற்று அதிகரித்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

related posts