Home இந்தியா மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கும் துணை ஆறுகள்

மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கும் துணை ஆறுகள்

by Jey

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.

அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் சாகுபடியில் தீவிரம் இந்த நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் அணைக்கு கை கொடுத்து உதவியது.

இதன் காரணமாக ஏற்பட்ட நீர்வரத்தை ஆதாரமாகக் கொண்டு நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டினார்கள்.

அதைத்தொடர்ந்து அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உட்படாமல் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து அறுவடையை எட்டியது.

related posts