Home இலங்கை தனது சகோதரியை தேடி ஆசிரியை ஒருவர் நாடு முழுவதும் பயணம்

தனது சகோதரியை தேடி ஆசிரியை ஒருவர் நாடு முழுவதும் பயணம்

by Jey

இரட்டை குழந்தைகளாக ஒன்றாக பிறந்து தான் என்றுமே பார்த்திராத தனது சகோதரியை தேடி ஆசிரியை ஒருவர் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார்.

கண்டி பேராதனை பிரதேசத்தில் வசித்து வரும் அனுராதா மஹாவேலகே என்ற திருமணமாகாத 40 வயதான விஞ்ஞான ஆசிரியையே தனது சகோதரியை தேடி வருகிறார்.
தத்து கொடுக்கப்பட்ட சகோதரி

தனது தாயும், தந்தையும் தான் சிறுமியாக இருக்கும் போது இறந்து விட்டதாகவும் தனக்கு மனேல் என்ற மற்றுமொரு சகோதரியும் இருப்பதாக கூறியுள்ளார்.

தனது இந்த சகோதரி வேறு ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டதாக பெற்றோர் கூறியதாகவும் எனினும் தனக்கு மூத்த இரண்டு சகோதரர்களிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் எந்த தகவல்களையும் வழங்கவில்லை எனவும் அனுராதா தெரிவித்துள்ளார்.

அனுராதா என்ற இந்த ஆசிரியை மிகிந்தலை ரஜமஹா விகாரைக்கு சென்று தனது சகோதரியை தேடும் விளம்பர பதாகை ஒன்றையும் விகாரை வளாகத்தில் வைத்துள்ளார்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு அது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர், அந்த பெண்ணின் புகைப்படம் இருக்குமாயின் அதனை விகாரை பூமிக்குள் காட்சிக்கு வைப்பதில் தவறில்லை எனக் கூறியுள்ளார்.

அத்துடன் ஆசிரியைக்கு விகாராதிபதி அதற்கான உதவிகளையும் செய்துள்ளார்.

மானேல் மஹாவேலகே என்ற இரட்டை சகோதரி மிகிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுவதாக அனுராதா கூறியுள்ளார்.

எனினும் அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சேன நாணயக்காரவிடம் அது குறித்து கேட்ட போது அப்படியான ஒருவர் பற்றி தனக்கு ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

மானேல் மஹாவேலகே என்ற தனது சகோதரி தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் இருந்தால், அது குறித்து 076- 7584969 என்ற அலைபேசி எண்ணுடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறும் அனுராதா மஹாவேலகே கேட்டுக்கொண்டுள்ளார்.

related posts