Home இலங்கை வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம்

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம்

by Jey

அமுலுக்கு கொண்ட வந்த கடன் வட்டி அதிகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டிருந்தது.

கடனுக்கான வட்டி 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தேசிய சேமிப்பு வங்கி அண்மையில் தாங்கள் வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 15 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், நிலையான வட்டி விகிதங்களின் கீழ் வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்கான வட்டியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், சில தனியார் வங்கிகளும் நிலையான வட்டி விகிதங்களின் கீழ் வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்கான வட்டியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts