உக்ரைனுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலைன் ஜோலி இந்த விடயத்தை ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரஸ்ய படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் முன்னெடுத்து வரும் போருக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைன் தலைமைகளுடன் அடிக்கடி பேசி வருவதாகவும் தேவையான இராணுவ உதவிகள் இடையறாது வழங்கப்படும் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ தெரிவித்துள்ளார்.