புலம்பெயர் இலங்கையர்களுக்கு வீடுகளை விற்பனை செய்ததன் மூலம் ஒருதொகை டொலர் கிடைத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நடுத்தர வர்க்க வீடு விற்பனை திட்டத்தின் மூலம், இதுவரை 502,170 அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது இலங்கை நாணய பெறுமதியில் 181 மில்லியன் ரூபாவாகும்.
டுபாயில் பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது சர்வதேச அளவில் இத்திட்டத்துக்கான விளம்பரம் நடைபெற உள்ளது.
நடுத்தர வர்க்க வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் 2 மில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.