ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது.
இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு ‘பெண்கள் பிரிமீயர் லீக்’ என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் 10 நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் அந்த அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் மூடிய டெண்டர் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஐ.பி.எல். பெண்கள் அணிக்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாங்கின. இதில் 17 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்து இருந்தன. இதில் 7 ஐ.பி.எல். அணி நிர்வாகங்களும் அடங்கும்.