றொரன்டோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அண்மைய நாட்களாகவே பஸ், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில், ரயில் நிலையங்களில் வன்முற்ற்ச சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலர் மீது கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமையும் நபர் ஒருவர் மீது இளைஞர்கள் கும்பொலொன்று பஸ்ஸில் தாக்குத்தல் நடத்தியுள்ளனர்.
பஸ் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.