றொரன்டோவில் கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலைமை நீடித்து வருகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் இந்த வாரத்திலும் கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
றொரன்டோ மற்றும் தென் ஒன்றாரியோவில் சுமார் 10 முதல் 15 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என தேரிவிக்கப்படுகின்றது.
தென்பகுதியின் தாழமுக்க நிலையினால் நீண்ட நேரம் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் பனிப்பொழிவு நேரங்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.