கனடாவின் டொரன்டோ நகரில் நடுபகலில் இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டொரன்டோவின் ஷர்ஃப்ரோன் மற்றும் டுண்டாஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக டொரன்டோ போலீசார் தெரிவிக்கின்றனர்.
படுகாயம் அடைந்திருந்த நபரை உயிர் காப்பு பிரிவினர் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரும் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.