Home விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி

by Jey

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இருவரும் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தோல்வியை தழுவி அதிர்ச்சியை கொடுத்தனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி என்பது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்று. இதில் வெற்றி பெற்று தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என எண்ணியிருந்தார் சானியா மிர்சா.

ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. போட்டி முடிந்த பிறகு கண்ணீர் மல்க பேசிய சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

இருப்பினும் இன்னும் சில டென்னிஸ் போட்டிகளில் எதிர்வரும் காலத்தில் விளையாடினாலும், என்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுதான் என தெரிவித்தார்.

மேலும், ரவி போபண்ணா தன்னுடைய நீண்ட கால நண்பர் என குறிப்பிட்ட அவர், போபண்ணாவுடன் இணைந்து விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியாது, அவருக்கு என்னுடைய நன்றிகள் என உணர்ச்சி மல்க தெரிவித்தார். இந்த போட்டியை சானியா மிர்சா குடும்பத்தினரும், ரோகன் போபண்ணா குடும்பத்தினரும் நேரில் கண்டுகளித்தனர்.

related posts