கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் உக்ரேய்ன் விமானமொன்று ஈரான் எல்லைப் பகுதியில் பறந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
உக்ரேய்ன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 752 விமானம் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 176 பலியானதுடன் இதில் 100 பேர் வரையில் கனடாவுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் 55 பேர் கனேடியர்கள் என்பதுடன் 30 பேர் கனேடிய நிரந்தர வதிவிடதாரிகளாவர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடுர்பில் ஒன்றாரிNh நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஈரானிய படையினர் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை சர்வதேச பயங்கரவாத செயல் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நட்டஈடு கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.