ரீ.ரீ.சீ பொதுப் போக்குவரத்து சேவைக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
றொரன்டோ நகரில் சுமார் 50 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்து முறைமையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 50 பாதுகாப்பு படையினரை உடனடியாக கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் ரீ.ரீ.சீ பொதுப் போக்குவரத்து சேவையில் பயணம் செய்த பயணிகள் மீது எழுமாறான அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.