இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக நடைபெற்று வரும் டி20 தொடரின் இரு ஆட்டங்கள் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளன.
தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 3 போட்டிகளில் 360 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதே போல திறமையான ஆட்டத்தை அவர் டி20 போட்டிகளில் காட்ட முடியாமல் திணறி வருகிறார்.
இந்நிலையில், நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜூனியர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த அதிரடி ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.