இந்தியா மீதான பயணத்தடையை கனடா மீளவும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து விமானப் பயணங்கள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
திரிபடைந்த கொவிட் வைரஸ் தொற்று பரவுகை மிகவும் வீரியமாக இந்தியா போன்றநாடுகளில் காணப்படுகின்றது.
நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து பயணத்தடை நீடிப்பு குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என கனேடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.