ஒன்றாரியோ மாகாணத்தில் கைதிகள் மரணிப்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்மைய ஆண்டுகளில் ஒன்றாரியோ மாகாண சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் பலர் மரணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 186 பேர் உயிரிழந்துள்ளனர்ஃ
அதிக அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல், தற்கொலைகள் இயற்கை காரணிகள் போன்றவற்றினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
கைதிகள் இவ்வாறு மரணிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கைதிகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கைதிகளின் மரணங்களில் குறிப்பிடத்தக்களவு மரணங்கள் தவிர்க்கப்பட கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் அதிக அளவான கைதிகள் உயிரிழப்பது பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.