Home கனடா திருட்டுச் சம்பவங்களை தடுக்க பிரம்டன் மேயரின் நடவடிக்கை

திருட்டுச் சம்பவங்களை தடுக்க பிரம்டன் மேயரின் நடவடிக்கை

by Jey

திருட்டுச் சம்பவங்களை தடுக்க பிரம்டன் மேயர் பெற்றிக் பிரவுண் பரீட்சார்த்த முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளார்.

faraday bags வழங்குவதன் மூலம் வாகனத் திருட்டுச் சம்பவங்களை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த பேக் வாகன சாவிகளின் ரேடியோ அலையை கட்டுப்படுத்தக் கூடியது எனவும் இதனால் வாகனங்கள் களவாடப்படுவதனை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் அதிகளவான வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாவிகளின் FOB எனப்படும் பாதுகாப்பு கட்டமைப்புக்களை ஊடறுத்து கொள்ளையர்கள் வாகனங்களை கொள்ளையிட்டு செல்கின்றனர்.

இதனை தடுக்கும் நோக்கில் பிரம்டன் நகர மேயர் பெற்றிக் பிரவுண், faraday bags களை தனது நகர மக்களுக்கு வழங்குகின்றார்.

related posts