அந்தார்டிக்கா கண்டத்தில் பாரிய பனிப்பாறையொன்று உடைந்துள்ளது. அது இந்தியாவின் டெல்லி நகரை விட மும்மடங்கு பெரியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமடைதல் காரணமாக அந்தாண்டிக்காவின் பனிப்பாறைகள் உருக தொடங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே பாரிய பனிப்பாறை உடைந்துள்ளது.
அது 4 ஆயிரத்து 320 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டதென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். செயற்கை கோள் மூலம் அதன் புகைப்படங்களும் பெறப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த பனிப்பாறை கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது. அது முழுமையாக உருகக்கூடும். எனினும் இதனால் கடல் நீர்மட்டத்தின் அளவு உயர்வடைய வாய்ப்பில்லையென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.