Home உலகம் தைவானில் எப்போதும் பதற்றமான சூழல்

தைவானில் எப்போதும் பதற்றமான சூழல்

by Jey

தென் கிழக்கு சீன கடற்கரையில் இருந்து 100 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவு நாடு, தைவான். 1949-ம் ஆண்டில் இருந்து தைவான் தனி நாடாக இயங்கி வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அங்கு ஆட்சி செய்கிறது. ஆனால் தைவானை சீனா தனது மாகாணங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறது.

தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கு சீனா துடிக்கிறது. அப்படி இணைத்துக்கொண்டு விட்டால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கும்.

இது அமெரிக்க ராணுவ தளங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே சீனாவின் கனவுக்கு அமெரிக்கா தடையாக இருக்கிறது. தைவானை ஆக்கிரமிக்க சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதில் அமெரிக்கா தலையிடும் அபாயம் உள்ளது.

பதற்றமான சூழல் இதனால் தைவானில் எப்போதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி, கடந்த ஆகஸ்டு மாதம் தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இதை சீனா வன்மையாக கண்டித்தது.

ஆனாலும் அமெரிக்கா மட்டுமின்றி, பிரான்ஸ், ஜப்பான் என பல நாடுகள் தங்கள் பிரதிநிதிகள் குழுவை தைவானுக்கு அனுப்பி வருவது சீனாவுக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இருக்கிறது.

related posts