குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது;- “நான் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
எனது அணிக்கும், சக வீரர்களுக்கும் அமைதியையும், நான் களத்தில் உறுதுணையாக இருக்கிறேன் என்ற நம்பிக்கையையும் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் கவனம் செலுத்துகையில் எனது ‘ஸ்டிரைக் ரேட்’ குறையலாம்.
புதிய வாய்ப்புகளையும், புதிய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்கிறேன். டோனி பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டது போல் நானும் அணிக்கு பங்களிக்க ஆர்வமாக இருக்கிறேன்.