றொரன்டோவில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டுன்டாஸ் மற்றம் பே வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தி குத்து தாக்குதலில் பெண் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணின் வயிற்றுப் பகுதியில் கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.