ஹெய்ட்டியில் இடம் பெற்று வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு கனடிய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. அன்மைய நாட்களாக இடம் பெற்று வரும் கடுமையான வன்முறை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கனடா ராணுவ விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலென் ஜோலி ஆகியோர் இந்த ராணுவ விமானம் அனுப்பி வைக்கப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஹெய்ட்டியில் குழு மோதல் மற்றும் வன்முறைகள் அதிக அளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் சம்பவங்களையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ராணுவ விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த பன்முறையில் காரணமாக பொதுமக்கள் மருத்துவம், நீர் போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத ஒரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹெய்ட்டி அரசாங்கத்தினால் நேரடியாக பிடிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த ராணுவ விமானம் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.