கனடாவின் டொரன்டோ நகர யோக பிராந்தியத்தில் சாரதி ஒருவர் பாதசாரி ஒருவரை மோதி தப்பிச் சென்றுள்ளார்.
தோர்ன்ஹில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
பெண் பாதசாரி ஒருவர் வீதியை கடக்க முற்பட்டபோது வாகனம் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்தில் சிக்கி குறித்த பெண் பாதசாரி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்ஃ
எவ்வாறெனினும் குறித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீசார் இந்த வாகனத்தை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.