Home கனடா டொரன்டோவில் நூதன முறையில் மோசடி

டொரன்டோவில் நூதன முறையில் மோசடி

by Jey

டொரன்டோவில் நூதன முறையில் மோசடி சம்பவம் இடம்பெறுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டொரன்டோ போலீசார் இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.

வீடுகளின் கூரையை பழுது பார்ப்பதாக தெரிவித்து சிலர் இவ்வாறு வீட்டு உரிமையாளர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நபர் ஒருவர் கூரையை திருத்தித் தருவதாக கூறி வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் பணம் மோசடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான சிமோன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கூரை திருத்தும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுவதாக போலியாக கூறி நபர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கூரை திருத்துவது தொடர்பில் எவரேனும் பணம் கோரினால் மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

related posts