இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேரவாத பௌத்தத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதனை எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும், சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையை வழங்குவதாகவும் நேற்று (10.02.2023) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்பு பேரவையின் 28ஆவது நூலாக சிங்கள தம்மசதகனீப்பகரண வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.