Home இந்தியா கவர்னர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டு

கவர்னர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டு

by Jey

கொரோனாவில் பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு இயல்பு நிலைத் திரும்பிவிட்ட பிறகும் கவர்னர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கவர்னர் மாளிகையின் முதல் வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கி வந்தது.

பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்ற இப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. தொழுகைக்கு வருபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் வாகன விவரங்களை நுழைவாயிலில் காவல் அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டே தொழுது வந்தனர்.

இது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. இதில் உள்நோக்கம் உள்ளதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. இதுகுறித்து கவர்னர் உரிய கவனமெடுத்து, பல ஆண்டுகளாக அமைதியாகத் தொழுகை நடந்து வந்த பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவன செய்ய வேண்டுகிறோம்.

related posts