பல்லடம் அருகே கரடிவாவி முத்தாண்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமாக பஞ்சு மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மில் இயங்கியது.
தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு அந்த மில்லினுள் இருந்து திடீரென்று கரும் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ மளமள வென்று மில் முழுவதும் பரவியது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீைர பிய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதன்பின்னர் மூன்று தனியார் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர்.
எந்திரங்கள் எரிந்து நாசம் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், எந்திரங்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்