Home இலங்கை மலையகத் தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும் – மனோ கணேசன்

மலையகத் தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும் – மனோ கணேசன்

by Jey

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை வருகை தந்த இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கும், இலங்கை அரசியல் சமூக தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை இந்திய தூதரகத்தில் நேற்று (12.02.2023) நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை எந்தக் கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி உங்கள் பாரதிய ஜனதா கட்சி.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகிய நீங்கள் இருவரும் உங்கள் கட்சியின் இரண்டு பிரதான ஆளுமைகள்.

உங்கள் கட்சி, அரசாங்கம் சார்பில் நீங்கள் இருவரும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும். தொப்புள் கொடி உறவுகளான எம் மீது, இந்தியாவின் குறிப்பாக இந்திய மத்திய அரசாட்சி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அக்கறை இன்னமும் கணிசமாக அதிகரிக்க வேண்டும்.

related posts