திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பணியாளர் தேர்வு ஆணையம் பல்வகை பணியாளர் பணிக்கு ஆப்பரேட்டர், எழுத்தர், கேட் கீப்பர்கள், காவலாளி, இளநிலை ஆப்பரேட்டர், தோட்டக்காரர், ஹவல்தார் உள்பட 11,409 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தகுதியானவர்கள் https://ssc.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் வருகிற 17-ந் தேதியாகும். 1-1-2023 அன்று 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. ஒரே கணினி வழி எழுத்துத்தேர்வாக தமிழிலில் இரண்டு பிரிவுகளில் 1½ மணி நேரம் நடத்தப்படும்.
வருகிற 17-ந் தேதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், படிக்க வேண்டிய பாடங்கள், தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள், பாடக்குறிப்புகள் போன்றவை குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
தகுதியுடையவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 94990 55944 எண்ணில் தொடர்பு கொண்டுவிவரங்களை பெறலாம்.