நடிகை மாளவிகா மோகனன் ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது பிடிக்காது என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.மாளவிகா மோகனனின் பேச்சுக்கு நயன்தாரா ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மலையாள நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படம் தயாராகி வருகிறது. படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கும் மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
மலையாள ஊடகம் ஒன்றுக்கு மாளவிகா அளித்த பேட்டி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த பேட்டியில் மாளவிகா லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பற்றி பேசினார். ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறினார்.
ஹீரோக்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது போல் ஹீரோயின்களையும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டும் என்று மாளவிகா கூறினார். கத்ரீனா கைப், ஆலியா பட், தீபிகா படுகோனே ஆகியோர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று மாளவிகா கூறினார்