Home உலகம் இரண்டு நாடுகளிலும் சுமார் 26 மில்லியன் பேருக்கு மனிதநேய உதவிகள் தேவை

இரண்டு நாடுகளிலும் சுமார் 26 மில்லியன் பேருக்கு மனிதநேய உதவிகள் தேவை

by Jey

நில அதிர்வினால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியிலும் சிரியாவிலும் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு நாடுகளிலும் கழிவுநீர்க் கட்டமைப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த பல்லாயிரம் பேர் வீதிகளில் பொழுதைக் கழிக்கின்றனர்.

இந்நிலையில் வழக்கமான சளி, காய்ச்சல், COVID கிருமித்தொற்று போன்ற அபாயங்கள் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

மேலும் இரண்டு நாடுகளிலும் சுமார் 26 மில்லியன் பேருக்கு மனிதநேய உதவிகள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

related posts