துருக்கியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் உயிரிழந்த கனேடிய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
துருக்கியின் அன்டாக்கியா என்னும் இடத்தில் அமைந்திருந்த ஐந்து மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஹாலிபிக்ஸ் பகுதியைச் சேர்ந்த சாமார் ஸோரா என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
33 வயதான ஸோராவின் சடலத்தை மீட்பதற்கு உதவியவர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி பாராட்டியுள்ளனர்.
நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க விரும்புவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நில நடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35000த்தை கடந்துள்ளது.