Home இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி

உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி

by Jey

உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளது. மத்திய காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்வெளியிட்ட தரவுகளின் படி, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரையிலான ஒரு வார காலத்தில் முதல் 10 இடத்தில் உள்ள காற்று மாசுப்பாட்டு நகரங்கள் பின்வருமாறு 1. லாகூர் (பாகிஸ்தான்) 2. மும்பை (இந்தியா) 3. காபூல் (ஆப்கானிஸ்தான்) 4. காஹ்சியுங் (தைவான்) 5. பிஷ்கெக் (கிர்கிஸ்தான்) 6. அக்ரா (கானா) 7. கிராகோவ் (போலந்து)* 8. தோஹா (கத்தார்)* 9. அஸ்தானா (கஜகஸ்தான்) 10. சாண்டியாகோ (சிலி) இந்த 10 நகரங்களில் காற்று மாசடைந்துள்ளது என மத்திய காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று(பிப்.,15) அறிக்கை வெளியிட்டது.

இது குறித்து அரவிந்த கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஆகும். டெல்லி மக்களின் முயற்சிகள் பயன் அளிக்கின்றன. டெல்லிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இன்னும் முயற்சி செய்ய வேண்டும். உலகின் மிக சுத்தமான நகரங்களில் நாம் கணக்கிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளா

related posts