நாடு முழுவதிலும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதில், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள் விநியோக நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் 500 மில்லியன் ரூபா நிலுவைப் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மருந்துப் பொருட்கள் இறக்குமதி தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள நோயாளிகள்
மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள காத்திருக்கும் நோயாளிகள் உயிராபத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள பெருந்தொகை பணம் செலவிடப்படுவதாகவும் இதனை நோயாளிகளினால் செலவிட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.