உலகையே அதிர வைக்கிற வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது.
யாரும், ஏன், உக்ரைனோ, ரஷியாவாகூட எதிர்பார்க்காதபடிக்கு இந்த போர் ஓராண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தோள் கொடுத்து வருகின்றன.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எந்த வித முன்னறிவிப்புமின்றி உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய வரலாறு நவீன யுகத்தில் எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும், போர் நடக்கிற ஒரு நாட்டுக்கு சென்றதில்லை.
எனவே தனது உக்ரைன் பயணத்தின்மூலம் ஜோ பைடன் புதிய வரலாறு படைத்திருக்கிறார் என்றே பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தினை ஜோ பைடன் எப்படி மேற்கொண்டார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.