Home இந்தியா மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம்

மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம்

by Jey

டெல்லி மாநகராட்சி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை.

துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் இந்த தேர்தலை நடத்த முடியவில்லை. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது எனக்கூறி ஆம் ஆத்மி போர்க்கொடி உயர்த்தியது.

இதனால் மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிகழ்ந்த மோதலால் கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் மேயரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17-ந்தேதி தீர்ப்பளித்தது.

இதில் மாநகராட்சி தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள், 24 மணி நேரத்துக்குள் மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட வேண்டும் எனவும் அறிவித்தனர்.

related posts