உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.
2023-2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பராமரிக்க ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்களை நிறுவ ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது