நாட்டில் இன்று (22.05.2020) மேலும் 2,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 64,247 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் ஆரம்பமான கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,1242 உயர்வடைந்துள்ளதுடன் 33,115 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,635 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 1,26,99 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 1,451 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,132 ஆக உயர்வடைந்துள்ளது.