ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் அணு ஆலை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவில் மின்சாரத் தேவை காணப்படுவதனால் மாகாண அரசாங்கம் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளது.
2050ம் ஆண்டளவில் இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தி செய்வதனை நிறுத்திவிட்டு முழு அளவில் அணுஆலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்காக 400 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட உள்ளது.