Home கனடா றொரன்டோவில் 24 மணித்தியாலங்களில் 17 சென்றிமீற்றர் பனிப்பொழிவு

றொரன்டோவில் 24 மணித்தியாலங்களில் 17 சென்றிமீற்றர் பனிப்பொழிவு

by Jey

றொரன்டோவில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 17 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவியதாக சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடுமையான குளிருடனான காலநிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பனிப்பொழிவு காரணமாக பியர்சன் விமான நிலையத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts