எதிர்வரும் ஜூன் மாதத்தில் டொரன்டோ நகர மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
டொரன்டோ நகர பிரதம லிகிதர் ஜான் எல்பிக் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் நகர சபை தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடாத்துவதற்காக சுமார் 13 மில்லியன் டாலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதாக ஜான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி டொரன்டோ நகர மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.