உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டுமெனவும், அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் ரஸ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த வாக்கெடுப்பின் போது ரஸ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்துள்ளன.
7 நாடுகள் ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், இலங்கை, இந்தியா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜெர்மனி இலங்கையிடம் கோரியிருந்தது.
ரஸ்யாவிற்கு எதிர்ப்பு வெளியிடும் தீர்மானத்தை இலங்கை ஆதரிக்காமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.