அமெரிக்காவில் போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக எடுத்து தடுமாறும் மக்கள் அமெரிக்க தெருக்களில் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நபர் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இப்போது ஒரு புதிய போதை மருந்து அமெரிக்க தெருக்களில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது, உண்மையில் அது மக்களின் தோலை அழுக செய்கிறது.
அமெரிக்காவில் புதிதாக போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பெயர் டிரான்ஸ் (tranq) அல்லது சைலாசின்(Xylazine). இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதனை ஜாம்பி போதைப்பொருள் ( Zombie Drug) என அழைக்கிறார்கள். பொதுவாக இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட மருந்து.
இதனை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவமனைகளில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை வைத்து தான் இந்த கொடூர போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது.