ஒன்றாரியோவில் இடம் பெற்ற தீ விபத்து சம்பளத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோ மாகாண பூர்வ குடியின மக்கள் வாழும் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றிலிருந்து இரண்டு வயது வந்தவர்களும் ஓர் சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ பூர்வ குடியின மக்கள் வாழும் வடமேற்கு பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
Pikangikum என்னும் பூர்வ கொடியின கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வீடுகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என பூர்வ குடியின மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலைமையின் பாரதூரத் தன்மையை அரசாங்கம் புரிந்து கொள்ள தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயிர் சேதங்கள் ஈடு செய்ய முடியாதவை என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.