Home இலங்கை சீனாவிற்கு எதிராக போராட நேரிடும் மனோ எச்சரிக்கை

சீனாவிற்கு எதிராக போராட நேரிடும் மனோ எச்சரிக்கை

by Jey

சீனாவிற்கு எதிராக போராட்டம் நடாத்த நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ் மொழியை தொடர்ச்சியாக புறக்கணித்து மொழி சட்டத்தைமீறும் சீனாவுக்கு எதிராக தெருப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரின் டுவிட்டர் பதிவு வருமாறு,

” தமிழை தவிர்த்து, சீனர் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் உள்ளன. நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கியுள்ளேன். எனினும் பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் #தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.” – என்றுள்ளது.

related posts