இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் சிக்கித்தவித்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 31 ரன்களிலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 26 ரன்களிலும் அவுட்டாகினர். இந்த நிலையில்