இந்த மாதம் முழுவதிலும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அருகாமையில் இருக்கும் கடைகளுக்கும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் வெளியே சென்று பொருட் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.